கொலைக்காரனாக பரத்.! மிரட்டலாக வெளியான ‘நடுவன்’ படத்தின் ஸ்னீக் பீக் டிரைலர்.!

Default Image

பரத் கொலைக்காரனாக நடிக்கும் ‘நடுவன்’ படத்தின் ஸ்னீக் பீக் டிரைலர் மிரட்டலாக வெளியாகியுள்ளது.

நடிகர் பரத் 2003ல் வெளியான தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து இவர் ஒரு சில மலையாள, இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடம் காளிதாஸ் என்ற படத்தின் மூலம் போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டியிருந்தார். தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் நடுவன்.

கொலைக்காரனாக நடிக்கும் இவருக்கு ஜோடியாக அபர்ணா வினோத் நடித்துள்ளார். ஷரங்க் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சென்னை டூ சிங்கப்பூர் கோகுல், குரு, சுரேஷ், அருவி பாலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.தரண்குமார் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் தற்போது நடுவன் படத்தின் ஸ்னீக் பீக் டிரைலர் வெளியாகியுள்ளது. தப்புன்னு தெரிஞ்சும் கொலைகளை செய்யும் வசனத்துடன் மிரட்டலாக வெளியான இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்