கொரோனாவில் இருந்து மீண்ட பாகுபலி இயக்குனர்..!

இயக்குனர் ராஜமௌலி சிகிச்சை முடித்து முழுமையாயக குணமடைந்து இருப்பதாக கூறி இருக்கிறார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான ராஜமௌலிக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், கொரோனா உறுதியானதை அடுத்து தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் இயக்குனர் ராஜமௌலி அதில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது இயக்குனர் ராஜமௌலி சிகிச்சை முடித்து முழுமையாயக குணமடைந்து இருப்பதாக கூறி இருக்கிறார். மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் மற்றவர்களை காப்பாற்ற பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என ராஜமௌலி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் இதுகுறித்து இயக்குனர் ராஜமௌலி தனது ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் செய்தது “இரண்டு வாரங்களாக தனிமை படுத்திக் கொண்டு குவாரண்டைனில் இருந்தோம். எந்த அறிகுறியும் இல்லை. தற்போது டெஸ்ட் எடுக்கலாம் என சென்று சோதனை செய்து கொண்டோம். எங்கள் அனைவருக்கும் நெகட்டிவ் என வந்திருக்கிறது. இன்னும் மூன்று வாரங்கள் காத்திருந்த பிறகு தான் antibodies உருவாகி இருக்கிறதா என பார்த்துவிட்டு பிளாஸ்மா தானம் செய்யலாமா என பார்க்கலாம் என மருத்துவர் கூறி இருக்கிறார்” என்றும் ராஜமௌலி ட்வீட் செய்துள்ளார்.
Completed 2 weeks of quarantine! No symptoms. Tested just for the sake of it… It is negative for all of us…
Doctor said we need to wait 3 weeks from now to see if we’ve developed enough antibodies for plasma donation!— rajamouli ss (@ssrajamouli) August 12, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025
AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!
February 28, 2025