பாகுபலி வில்லனுக்கு திருமணம்.! என்றைக்கு தெரியுமா.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பாகுபலி வில்லனுக்கு வருகிற ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிளாக் பஸ்டர் படமான பாகுபலியின் இரண்டு பாகத்திலும் வில்லனாக நடித்து பிரபலமானவர் ராணா டக்குபதி. அவர் அதனையடுத்து ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த சில காலமாக ராணா தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் ராணா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பெண்ணிடம் இணைந்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு, அந்த பெண் எனக்கு யெஸ் சொல்லி விட்டார் என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். அந்த பெண் ஹைதராபாத்தில் உள்ள டியூ டிராப் டிசைன் ஸ்டுடியோவின் நிறுவனரான மிஹீகா பஜான் என்பவராவர். இந்த நிலையில் ராணாவின் அப்பாவும், தயாரிப்பாளருமான சுரேஷ் பாபு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ராணா மற்றும் மிஹீகா இருவரும் காதல் செய்வதாகவும், இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், இந்த வருடம் திருமணம் நடக்க கூடும் என்றும் கூறியிருந்தார். சமீபத்தில் இரு வீட்டாரின் முன்னிலையிலும் ரோகா என்ற பூமுடித்தல் விழாவை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது
இந்த நிலையில் ராணாவின் அப்பாவும், தயாரிப்பாளருமான சுரேஷ் பாபு தனது மகனின் திருமணத்தை ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் டைம் ஆஃப் இந்தியா என்ற நாளிதழின் அறிக்கையின் படி மிஹீகா ஒரு மார்வாரி குடும்பத்தை சார்ந்தவர் என்பதால் இரண்டு நாட்களாக இரண்டு திருமண நிகழ்வுகளும் தெலுங்கு மற்றும் மார்வாரி மரபின் படி நடைபெறும் என்றும் கூறியுள்ளார். மேலும் மணமகளின் மஹீகாவின் தாயாரான பண்டி பஜாஜ் தேசிய நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அரசாங்க விதிகளை பின்பற்றி கொண்டு திருமண நிகழ்வுகள் நிச்சயிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். ஆனால் ராணா இதுவரை இதனை குறித்த எந்த தகவலையும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)