இந்திய சுதந்திரப் போராட்ட தலைவரும் பஞ்சாப்பின் சிங்கம் என்று அழைக்கப்பட்ட லாலா லஜபத் ராய் மரணத்திற்கு காரணமான பிரிட்டிஷ் அதிகாரியை கொன்ற குற்றத்திற்காக பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு ஆகியோரை தூக்கிலிட்ட தினம் வரலாற்றில் இன்று.
இந்திய இளைஞர்களின் மனதில் சுதந்திர போராட்ட சுடரை ஏற்றி அதை பெரும் காட்டுத்தீயாக வளர்த்த வீரர்களில் பகத் சிங் முக்கியமானவர். இவர் செப்டம்பர் மாதம் 28ஆம் நாள் 1907-ம் ஆண்டு, பாங்காவில் பிறந்தார். 24 வயது இளைஞரான பகத் சிங்கை கைது செய்த பிரிட்டிஷ் அரசு, 63 நாட்கள் சிறைத் தண்டனைக்கு பிறகு அந்த இளம் வீரரை மார்ச்23, 1931-ம் ஆண்டு தூக்கிலிட்டது.
இவர், சிறையில் இருக்கும் போது இந்திய கைதிகளுக்கு சம உரிமை பெற, சிறையிலேயே உண்ணாவிரதப் போராட்டத்தையும் பகத் சிங் முன்னெடுத்து மக்கள் மனதில் பிரபலமானார் பகத்சிங். இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய இளம் வீரர் பகத் சிங், சுதந்திர இந்தியாவை பார்க்கும் முன்னரே உயிர் துறந்தார். எனினும் பகத் சிங்கின் உயிரிழப்பு, இந்திய இளைஞர்கள் மத்தியில் சுதந்திர தாகத்தை மேலும் வளர்த்து, சுதந்திரத்தை பெற்று தந்தது.இன்றளவும் பகத்சிங் இளைஞர்கள் மத்தியில் ஒரு கதாநாயகனாகவே வலம் வருகிறார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…