மீண்டும் கூகுளிலிருந்து தூக்கப்பட்டது இந்தியன் பப்ஜி.!

Default Image

நேற்று மாலை , பாதுகாப்பு காரணங்களால் இந்தியன் பப்ஜியான பாட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா (BattleGround Mobile India) கூகுள் ஆப்பில் இருந்து நீக்கப்பட்டது.

இந்திய பயனர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விதமாக இருப்பதாக கூறி பல்வேறு சீன ஆப்களை இந்தியா தடை செய்தது. அதனை தொடர்ந்து அந்த ஆப்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது.

அதில் இந்தியாவில் அதிகம் பயனர்களால் டவுன்லோட் செய்யப்பட்டு பல இளைஞர்களால் கவரப்பட்ட செயலி தான் பப்ஜி.

இந்த செயலி மறு உருவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் இந்தியர்களுக்கு பாட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா (BattleGround Mobile India) என ரிலீஸ் ஆனது.

இத்தனையும் குறுகிய காலத்தில் 100 மில்லியன் பயனர்களால் உபயோகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை ,பாதுகாப்பு காரணங்களால், அரசு  கட்டுப்பாடுகளின் கீழ், இந்தியன் பப்ஜியான பாட்டில்கிரவுண்ட் மொபைல் இந்தியா (BattleGround Mobile India) கூகுளில் இருந்து நீக்கப்பட்டது.

இதனால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  இருந்தும், ஏற்கனவே டவுன்லோட் செய்து வைத்து விளையாடும் பயனர்களுக்கு பாதிப்பில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்