ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓமைக்ரான் வகை கொரோனா பரவுவது முதல் கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில், இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.
இந்த வைரஸ் தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. எனவே தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் ரத்து செய்து வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் கூறுகையில், ஓமைக்ரான் வேகமாக பரவும் தன்மை கொண்டதா என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த வைரஸ் மற்ற வைரஸ்களை விட வீரியமிக்கதா என்பது குறித்து ஆய்வுகள் நடைபெறுகின்றன. இந்த வகை வைரஸ் பரவலை தற்போது பயன்படுத்தப்படும் ஆர்டிபிசிஆர் பரிசோதனையிலேயே கண்டறிய முடியும் என தெரிவித்துள்ளது.
மேலும், ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓமைக்ரான் வகை கொரோனா பரவுவது முதல் கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், மக்கள் மிகுந்த கவனமுடன் இருக்குமாறும், தனி மனித இடைவெளியை கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் ஆகியவற்றை பின்பற்றுமாறும் அறிவுரை வழங்கியுள்ளனர்.
ராஜ்கோட் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது கடந்த ஜனவரி 11-ல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய…
சென்னை : வெளிநாடு வேலைவாய்ப்பு என ஒரு சில தனியார் நிறுவனங்களில் அதிக பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்தவர்கள் இங்கு…
ராஜ்கோட் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட்…
சென்னை : இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோர் நடிக்கும் ‘SK 25'…
குஜராத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான, 3-வது டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று இரவு 7 மணிக்கு…