நமது போனில் உள்ள தரவுகளை திருடும் நெட்ஃபிலிக்ஸ் குளோன்.
மக்கள் தங்களது நேரத்தை செலவிட பொழுதுபோக்கும் பிரபல செயலியாக நெட்பிளிக்ஸ் இருக்கிறது. இந்த நெட்பிளிக்ஸ் போன்று, குளோன் செயலி உருவாக்கப்பட்டு, பல பிரச்சினைகளுக்கு வழிவகுள்ளது. தற்போது பிளே ஸ்டோரில் இந்த ஒரு புதிய செயலியால், புது பிரச்னை கிளம்பியுள்ளது.
அதாவது, நெட்ஃபிலிக்ஸ் குளோனை பயன்படுத்தினால், அது ஒரு பயனரின் வாட்ஸ்அப் செய்திகளை திருடி, பின் வாட்ஸ்அப் செய்திகளுக்கு தானாக பதில் அளித்து அதன் மூலம் தன்னை பரப்பிக் கொள்கிறது. இது குறித்து புகாரளிக்கப்பட்ட நிலையில், இதனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளனர். இது ஒருவரின் ஆண்ட்ராய்டு மொபைலில் பதிவிறக்கம் செய்யப்பட்ட பின் என்ன செய்கிறது என்றால், பயனர்கள் அதை மற்ற பயன்பாடுகள் மற்றும் அறிவிப்புகளின் மேல் பயன்படுத்துமாறு அது அனுமதி கேட்கிறது.
இவ்வாறு அனுமதிக்கும் பட்சத்தில் இது மோசடி உள்நுழைவு திரைகளை ஏற்ற அனுமதித்து, பின்னர் பயனரின் சாதனத்திலிருந்து முக்கியமான உள்நுழைவு சான்றுகளை அது திருடுகிறது. இதனை பயன்படுத்தும் போது இது அறிவிப்புகள் நமக்கு வரும் அறிவிப்புகளை பெற்று, அதற்கு தானாக பதிலளிக்கக் கூடிய திறனைப் பெறுகிறது. மேலும் ஒருவர் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு போன் முழுவதையும் தன்வசப்படுத்திக் கொள்கிறது.
இது பயனர்களின் தனிப்பட்ட செய்திகளை திருடுவது, வங்கி மற்றும் அதை சார்ந்த சேவைகளின் பாஸ்வேர்டுகளை திருடுவது போன்ற முக்கியமான தரவுகளை தன் வசம் கையகப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறது.
இதுகுறித்து செக்பாயிண்டின் ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது, இந்த தனித்துவமான அச்சுறுத்த பயன்படுத்தும் போது, அவர்களிடம் இருந்து தகவல்களை திருடி, தவறான முறையில் பரப்பவும், பயனர்களின் வாட்ஸ்அப் கணக்குகளில் இருந்து சான்றுகளையும் தரவுகளையும் திருடவும் உதவக் கூடும். எனவே இது தற்போது தடை செய்யப்பட்டு இருந்தாலும், எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு கட்டத்தில் வேறு ஏதாவது வழிகளில் வருகிறதா என்பதையும் ஜாக்கிரதையாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால்…
சென்னை : டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக இன்று ஒரு சில மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…