iphone வச்சுருப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! அதுக்கு Android எவ்வளவோ பரவல்ல.. Android பயனர்களுக்கு ஒரு குட் நியூஸ்..!

Published by
kavitha
  • இளைஞர்களின் உள்ளத்தை களவாடும் ஆப்பிள் நிறுவனத்தின் உயர்வகை கண்டுபிடிப்பான iphone
  • iphone எளிதாக Hack செய்யப்படுவதாக iphone பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இளைஞர்களின் கனவு ஸ்மார்ட் போன்  மற்றும் மிகவும் காஸ்ட்லியாக வலம்வரும் ஆப்பிள் நிறுவனத்தின் கண்டுபிடிப்பான iphone.இவற்றில் உயர்பாதுகாப்பு அம்சங்கள் அடங்கி உள்ளதாக  கூறப்படும் நிலையில் இளைஞர்கள் மத்தியில் இப்போன் குறித்த ஆர்வம் அதிகரித்து கொண்டே தான் வருகிறது.தன் வாழ்நாளில்  iphone-ஐ வாங்கியே ஆக வேண்டும் என்று எல்லாம் உள்ளார்.அத்தைய iphone பிரியர்களை தற்போது வெளிவந்த ஒரு செய்தியானது அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

அது என்னவென்றால் iphone -ஜ ஆண்ட்ராய்டு போன்களை விட எளிதாக Hack செய்ய முடிகிறது என்று தகவல் வெளியாகி கடும் அதிர்ச்சியை  iphone பிரியர்களுக்கு தந்துள்ளது.

Image result for iphone"

தற்போதய மின்னனுக்காலக்கட்டத்தில் ஸ்மார்ட் போன்களின் பாதுகாப்பு என்பது கேள்விக் குறியாக உள்ளதை அனைவரும் அறிந்து உள்ளோம். ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட் போன்களை காட்டிலும்  iOS என்ற இயங்குதளங்களால் பயன்படுத்தப்படும் iphone மாடல்கள் தான் மிகவும் பாதுகாப்பானது, இதனை அவ்வளவு எளிதால Hack செய்வது என்பது கடினமான ஒன்று என்று எல்லாம்  கூறப்பட்டு வந்த நிலையில் iphone-களை Hack செய்வதை காட்டிலும் ஆண்ட்ராய்டு போன்களை Hack செய்வது கடினமாக உள்ளது என்று அமெரிக்காவை சேர்ந்த துப்பறியும் மற்றும் தடயவியல் நிபுணரான Rex Kiser என்பவர் கூறி உள்ளார்.

அவர் இது பற்றி கூறுகையில் அமெரிக்காவை பொறுத்தவரை நாட்டின் பாதுகாப்பு போன்ற பலக் காரணங்களுக்காக தீவிரவாதிகள் மற்றும் சந்தேக நபர்களின் Smart Phone-களை Hack செய்து அந்த தரவுகளை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் பல முக்கிய வழக்குகள் மற்றும் விசாரணைகளில்  Hack செய்யப்படும் தகவல்கள் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தியது.கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு வரையில்  iphone சாதனங்களை எல்லாம் அவ்வளவு எளிதாக Hack செய்ய முடியாது. ஆனால் ஆண்ட்ராய்டு போன்களை எல்லாம் அப்படியே அசால்ட்டாக Hack செய்வோம்.

தற்போது  இந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது என்று கூறிய அவர் முன் எல்லாம் ஆண்ட்ராய்டு சாதனங்களில் உள்நுழைந்து அவற்றில் உள்ள தரவுகளை கண்காணிப்போம்.சமீபக்காலமாக அப்படி செய்ய முடியவில்லை. குறிப்பாக கூகுள் பிக்சல் 2 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் 9 போன்ற சாதனங்களிலிருந்து எந்த ஒரு தரவையும் ஹேக் செய்யவே முடியவில்லை. இதில் Huawei p20 pro மொபைல்களை பொறுத்தவரை, Hack செய்ய பயன்படுத்துகின்ற cracking softwareக்கு சின்ன நூல் கூட கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இதன் முலமாக எங்களால் குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு சாதனங்களை Hack செய்ய முடியாது என்று அர்த்தம் கொள்ள கூடாது. iphone-களை Hack செய்வதை காட்டிலும், ஆண்ட்ராய்டு சாதனங்களை Hack செய்ய  தற்போது நீண்ட நேரம் ஆகிறது என்று வேண்டுமானால் சொல்லலாம் என்று கூறினர்.இதனால் iphone பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Published by
kavitha

Recent Posts

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…

10 hours ago

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…

11 hours ago

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

12 hours ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

13 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

13 hours ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

14 hours ago