வெற்றிலை சாப்பிடுவது நல்லது தானாம், ஆனால் இப்படி தான் சாப்பிட வேண்டுமாம்!

Default Image

வயதானவர்கள் வெற்றிலை சாப்பிடும் பொழுது நாம் வேலை வெட்டி இல்லாமல் சவைக்கிறார்கள் என கிண்டல் செய்திருப்போம்,  ஆனால் அந்த வெற்றிலையை உண்பதால் நமது உடலுக்கு பல நன்மைகள்  கிடைக்கிறதாம்,அறிந்து கொள்ளலாம் வாருங்கள். 

வெற்றிலை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்

முன்பெல்லாம் ஆண் பெண் வேறுபாடின்றி வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவது வழக்கம், அதுவும் வெறுமையாக இல்லை பாக்கு, சுண்ணாம்பு, வால்மிளகு, ஏலக்காய், சாதிக்காய், சுக்கு ஆகியவை சேர்த்து வாய்மணக்க உண்பார்கள். ஆனால் தற்பொழுது பற்களில் கறைபடிந்த பலர் முன்பதாக உண்ணும் பொழுது நாகரீகமற்றதாய் இருக்கிறது என்பதற்காக பலரும் இதை உன்ன விரும்புவதில்லை. ஆனால், இந்த வெற்றிலை சாப்பிடுவதால் குடும்ப இல்லற வாழ்வின் ஆசை அதிகரிக்குமாம்.

மேலும், செரிமானம் ஆவதற்கு மிகவும் உதவுகிறதாம். வயிற்றிலுள்ள புழுக்களை வெளியேற்ற உதவுவதுடன், பல்வலி, தொண்டை வழியையும் நீக்க பயன்படுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறதுதான், செரிமான கோளாறுகளையும் நீக்கி நன்கு பசியை தூண்டும் தன்மை கொண்டது. ஆனால், இதனை சாப்பிடும் பொழுது பாக்கை முதலில் போட கூடாதாம், கரணம் பாக்கின் துவர்ப்பு தன்மையால் நெஞ்சடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாம்.

வெற்றிலையினை வாயிலிட்டு சவைகையில் முதல் இரண்டு முறை உமிழ்நீரை துப்பி விட வேண்டுமாம். காரணம் இந்த முதல் சாறு வயிற்று புண் மற்றும் போதையை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாம். வெற்றிலையில் அதிகம் கால்சியம் சத்துக்கள் இருப்பதால் எலும்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவுகிறது. குழந்தைகளுக்கு நெஞ்சுசளி இருந்தால் வெற்றிலையில் கடுகு எண்ணெய் தடவி மிதமாக சூடேற்றி மார்பில் வைக்கலாம். இவ்வளவு அற்புத நன்மைகள் கொண்ட வெற்றிலையினை நமது முன்னோர்கள் எதோ நேரப்போக்கிற்காக பயன்படுத்தவில்லை, காரணத்துடன் தான் பயன்படுத்தியுள்ளனர், நாமும் பயன்படுத்துவோம் பயன் பெறுவோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்