“கூகுள் போன்” செயலியின் “பீட்டா” வெர்சன் தற்பொழுது சாம்சங் மற்றும் ஒன்ப்ளஸ் மொபைலில்.. அட நம்புங்கப்பா!
கூகுள் தொலைபேசி செயலியின் பீட்டா வெர்சனை தற்பொழுது பெரும்பாலான ஸ்மார்ட் போனிகளில் பெற முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூகுள் நிறுவனம், தனது செயலிகள் மற்றும் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்சனை தனது பிக்ஸல் ஸ்மார்ட் போன்களுக்கு மட்டும் வழங்குவது வழக்கம். தற்பொழுது கூகுள் போன் டயலர் செயலி (Google Phone) மூலம் நாம் நமது நண்பர்கள், குடும்பத்தினர்கள் உட்பட பலரையும் அழைத்து பேசலாம்.
தற்பொழுது இதன் பீட்டா வெர்சனை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனை கூகிள் பிக்ஸல் மொபைலுக்கு மட்டுமல்லாமல், சாம்சங் மற்றும் ஒன்ப்ளஸ் போன்ற ஸ்மார்ட்போன்களிழும் வெளியிட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த போன் செயலியின் பீட்டா வெர்சனை இதுவரை, சாம்சங் கேலக்ஸி எஸ் 20 அல்ட்ரா, கேலக்ஸி இசட் பிளிப், ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 7 டி, ஒன்பிளஸ் 8 ப்ரோ, ஒன்பிளஸ் நார்டு மற்றும் ஒன்பிளஸ் 6 டி போன்ற போன்களில் வெளிவந்துள்ளது.