எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி, உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார் பெர்னார்ட் அர்னால்ட்.!
எலான் மஸ்க்கை பின்னுக்கு தள்ளி உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார் பெர்னார்ட் அர்னால்ட்.
உலகின் மிகப்பெரிய ஆடம்பரப் பொருட்கள் நிறுவனமான லூயிஸ் வுட்டன் தலைமை நிறுவனமான LVMH இன் தலைமை நிர்வாக அதிகாரியான பெர்னார்ட் அர்னால்ட், 171 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆகியிருக்கிறார்.
ஃபோர்ப்ஸ் மற்றும் ப்ளூம்பெர்க் இன் அறிக்கையின்படி 164 பில்லியன் டாலர்(13.55 லட்சம் கோடி ரூபாய்) சொத்துமதிப்புள்ள எலான் மஸ்க்கை விட, 171 பில்லியன் டாலர்(14.12 லட்சம் கோடி ரூபாய்) சொத்து மதிப்பு பெற்று பெர்னார்ட் அர்னால்ட் உலகபணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
எலான் மஸ்க் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்தியாவின் பணக்காரர் கவுதம் அதானி 125 பில்லியன் டாலர்(10.32 லட்சம் கோடி ரூபாய்) சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில உள்ளார். ப்ளூம்பெர்க் இன் அறிக்கையின்படி மஸ்கின் சொத்துமதிப்பு குறைந்ததற்கு அவரது டெஸ்லாவின் பங்குகள் குறைந்ததே காரணம் என்று கூறப்படுகிறது.