இந்தியர்களை போல் நமஸ்தே சொன்னால் கொரோனா தொற்றை தடுக்கலாம்… நமஸ்தே செய்துகாட்டி இஸ்ரேல் பிரதமர் அசத்தல்…
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரேல் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேடன்யாஹூ அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் “கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை அறிவித்து அது குறித்து விவாதிக்கப்பட்டது.
அதில் குறிப்பாக நோய் தொற்றை பரவவிடாமல் தடுக்க எளிய நடவடிக்கையாக மக்கள் சந்திக்கும்போது வழக்கமாக கைகுலுக்குவதற்கு பதிலாக, இந்தியர்கள் வழியில் ‘நமஸ்தே’ என்று அவரவர்கள் இரு கைகளை கூப்பி சொன்னால் போதும்” என்றார்.அவர் இவ்வாறு கூறியதோடு நிற்காமல் ‘நமஸ்தே’ சொல்வது எப்படி என்று அதிகாரிகளுக்கு தனது இரு கைகளையும் கூப்பி செய்துகாண்பித்தார்.