இன்று போற்றுதலுக்குரிய”புரட்டாசி சனி” அளிக்கும் பலன்கள்!என்ன?
புரட்டாசி மாதம் முழுவதும் வழிபாடுகள் நிறைந்தது. அதிலும், புரட்டாசி சனிக்கிழமைகள் பெருமாளுக்கு மிகச்சிறப்பானது.ஒவ்வொரு சனிக்கிழமையும் உகந்த நாள்களாக இருந்தாலும்.புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை மிகவும் விஷேசமானதாக கருதப்படுகிறது.
அவ்வாறு புரட்டாசி சனிக்கிழமைகளில்களில் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டாலே பலன்கள் அதிகரிக்கும் மேலும் சனி, புதன் திசை நடப்பவர்கள், எள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால், வாழ்வின் அனைத்து தடைகள் நீங்கும் மற்றும் அனைத்தும் பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் தேடி வரும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது.
புண்ணியம் மிகுந்த புரட்டாசியில் வருகின்ற எல்லா சனிக்கிழமைகள், அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்று சுவாமிக்கு படையல் படைத்து வழிபடுவது இன்னும் சிறப்பு வாய்ந்த பலனைத்தரும். திருப்பதி ஏழுமலையானை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம் ஆகும். இயன்றவர்கள் திருப்பதிக்கே சென்று வேங்கடவனை வணங்கலாம். அவ்வாறு இல்லையேல் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருப் படத்தை வைத்தும் வழிப்படலாம். ப
புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் கடைப்பிடிக்கப்படும் விரதம் மிக சக்தி வாய்ந்தது. இவ்விரதம் புண்ணியத்தை இருமடங்காக்கி தர வல்லது.
இவ்விரதம் மற்றும் பூஜையை பொருட்களை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து, மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்யலாம்வேண்டும். மேலும் துளசி இலைகளால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது. அதனோடு மட்டுமின்றி பச்சரிசி மாவினால் விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர், இவ்வாறு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வறுமை அடியோடு நீங்குவதோடு வீட்டில் செல்வச் செழிப்பும் அதிகரிக்கும்.