நவராத்திரி வழிபாட்டால் கிடைக்கும் நன்மைகள்..!
நவராத்திரியில் ஒன்பதாவது நாளாக சரஸ்வதி பூஜை நடத்தி வருகிறோம். இந்த பூஜையில் அலுவலகங்கள் , வீடுகளில் பூஜை செய்து பூஜை செய்வது வழக்கம். ஒன்பது மலர்கள் , ஒன்பது பழங்கள் , ஒன்பது தானியங்கள் , 9 பிரசாதங்கள் என ஒன்பது விதமான நிவேதனங்களால் முப்பெருந்தேவியை பூஜை செய்து வழிபடுவது நவராத்திரியின் சிறப்பம்சமாகும்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் , ஒன்பது விதமான அம்பிகையை பூஜை செய்ய வேண்டும் அதனால் நம் வாழ்க்கை இன்னும் அழகாகவும் நலம் தரும் என்பது இதன் சிறப்பு. நவராத்திரியை வட மாநிலங்களில் துர்கா பூஜை என்ற பெயரில் கொண்டாடுகின்றனர்.
அனைத்து நவராத்திரி விழாக்களும் இரவு நேரங்களில் பூஜை செய்யப்படும். இந்த பூஜையை தேவர்கள் செய்யப்படுவதாக கூறி இரவில் நாவராத்திரியை வழிபடுகிறார்கள். வீட்டில் கொலு வைப்பதால் முப்பெரும் தேவியரின் அருள் கிடைக்கும் அதிலும் செல்வம் , அறிவு தைரியம் போன்ற வந்து சேரும்.
திருமணமான பெண்கள் பூஜை செய்தால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். குடும்பம் சிறப்பாக இருக்கும். திருமணமாகாத பெண்கள் பூஜை செய்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நல்ல வரனாகவும் கிடைக்கும்.
வீட்டில் திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள் இருந்தால் மரப்பாச்சியில் ஆண், பெண் பொம்மைகள் செய்து கொலுவில் வைப்பார்கள், கொலுவில் எப்போதும் இடம் பெறும் மரப்பாச்சியிலான பொம்மைகள் சிறப்பாக கருதப்படுகிறது.