கோழிக்கறி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.!

Default Image

பொதுவாக அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது கோழிக்கறி என்று கூறலாம், இந்த கோழிக்கறி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

நன்மைகள்:

சிக்கனில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் அதிலும் சிக்கனை வேக வைத்து சூப் போட்டு, அதில் மிளகுத்தூள் அதிகம் போட்டு குடித்தால், சளி, இருமல் போன்றவை குணமாகும்.குழந்தைகளின் வளர்ச்சிக்கு உள்ள சிறந்த உணவுகளில் சிக்கனும் ஒன்று. ஏனெனில் இதில் அதிகமான அளவில் அமினோ ஆசிட் இருப்பதால், அதனை குழந்தைகள் சாப்பிட்டால், உயரமாகவும், வலுவாகவும் இருப்பார்கள்.

சிக்கன் சூப்பில் ஜிங்க் அதிகம் உள்ளதால், அது சரியான நேரத்தில் பசியை உண்டாக்கும்.சிக்கனில் ஆண்களுக்கான சிறப்பான ஒரு நன்மை உள்ளது. அது என்னவென்றால், இதில் ஜிங்க் இருப்பதால், அது ஆண்களின் டெஸ்ட்ரோஜன் அளவை சீராக வைக்கும்.

சிக்கனில் சிறிது கொலஸ்ட்ரால் உள்ளது. ஆனால் அதே சமயம் இதில் நியாசின் இருப்பதால், அவை அந்த கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக காக்கும்.சிக்கனில் புரோட்டீன்அதிகமாகவும் உள்ளன. எனவே பாடி பில்டர் போன்று தசைகள் வேண்டுமென்பவர்கள், சிக்கனை அதிகம் சாப்பிட வேண்டும்.

சிக்கனில் செலீனியம் என்னும் சத்து நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடும் போது, அதில் உள்ள செலீனியம், பிற்காலத்தில் மூட்டுகளில் வலி ஏற்படுவதை தடுத்துவிடும்.சிக்கனில் வைட்டமின் பி5 இருப்பதால், அவை நரம்புகளில் ஏற்படும் அதிர்வுகள், அழுத்தம், இறுக்கம் போன்றவற்றை குறைத்துவிடும். எனவே மனம் சற்று இறுக்கமாகவோ அல்லது அழுத்தத்துடனோ இருந்தால், அப்போது க்ரில்டு சிக்கன் சாப்பிட்டால், மனம் ரிலாக்ஸ் ஆகிவிடும்.

சிக்கன் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனென்றால் இதில் வைட்டமின் பி6 அதிகம் இருக்கிறது. இந்த வைட்டமின் பி6 குறைவாக இருந்தால், ஹோமோசிஸ்டைன் அளவு தடுமாறும் வாய்ப்பு உள்ளது. அதன் அளவு தடுமாறுதல் என்பது இதயத்தில் அடைப்பை ஏற்படுத்தும் காரணிகளில் ஓன்று.

சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும்.

சிக்கனில் மக்னீசியம் அதிகம் உள்ளது. எனவே இதனை பெண்கள் சாப்பிட்டால், மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் பிரச்சனைகளான ஒருவித மனஅழுத்தம், வயிறு வலி போன்றவற்றை குறைக்கும். எப்படியெனில் மக்னீசியம் இரத்தத்தில் அதிகம் இருந்தால், அது அந்த நேரத்தில் ஏற்படும் மனஅழுத்தத்தை குறைக்கும். மேலும் வயிறு வலி ஏற்படுவதையும் தடுக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்