சீத்தாப்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.!
சீத்தாப்பழத்தை அரைத்து தேமல் உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் தேமல் நோய் குணமாகும்.
பழங்களில் மிகவும் சுவையான பழம் சீத்தாப்பழம் இந்த பழத்தை சிரியவர்களிலிருந்து இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பழம் ஆகும், இந்த பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.
நன்மைகள்:
சீத்தாப்பழத்தில் பல சத்துக்கள் உள்ளது மேலும் இதை சாப்பிடுவதால் இதயத்தை பலப்படுத்தி சீராக செய்யும் மேலும் இதயம் சம்பந்தமான நோய்கள் போன்றவை சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீங்கும், மேலும் காசநோய் உள்ளவர்கள் இந்த சீதாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது என்றே கூறலாம்.
மேலும் இதில் வைட்டமின் சத்து இரும்பு சத்து அதிகமாக இருக்கிறது இது மிகவும் அதிகமான மருத்துவ பலன்களை கொண்டது, மேலும் சிறுவர்கள் இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகப்படுத்தும் , மற்றும் ஊளை சதையை குறைக்க உதவும் உடல் பருமனாக இருக்கும் நபர்கள் தொடர்ந்து சீத்தாப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் கட்டுப்படுத்தி உங்களை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளும்.
மேலும் இரத்த சோகை இருப்பவர்கள் இந்த சீத்தாப்பழத்தை சாப்பிட்டுவந்தால் ரத்தத்தை சுத்தமாக்கி சீராக்கி உடலுக்கு நல்ல பலன்களைத் தரும், மேலும் மனநோய் குணமாகும், சீத்தாப்பழத்தை இஞ்சி சாறு மற்றும் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து உடலில் சக்தி கிடைக்கும். உடல் வலிமை பெற திராட்சைப்பழம் சாறுடன் சீத்தாப்பழ சாறை சிறிதளவு சேர்த்து சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது ,
தூக்கம் இல்லாதவர்கள் இரவு நேரங்களில் இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தீர்கள் என்றால் நன்றாக துக்கம் கொடுக்கும் இதனுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து சாப்பிட்டு வந்தீர்கள் என்றால் சிறுநீரக பிரச்சனைகள் நீங்கும், மேலும் சீத்தாப்பழத்தை அரைத்து தேமல் உள்ள இடத்தில் தேய்த்து வந்தால் தேமல் நோய் குணமாகும்.