கரும்புச்சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.!
கரும்புச்சாறு குடிப்பதால் புற்று நோய் வருவதை தடுக்கலாம்.
கரும்புச்சாறு குடிப்பதால் உடலில் பல்வேறு வகையான சத்துக்கள் கிடைக்கிறது, பொதுவாக பொங்கலில் அனைவரும் கரும்பு விரும்பி சாப்பிடுவது உண்டு, இந்த கரும்பில் வைட்டமின் மற்றும் கனிமச் சத்துக்கள் அதிகம் உள்ளது. அதிலும் பாஸ்பரஸ், இரும்புச் சத்து, பொட்டாசியம், கால்சியம் போன்றவை இருப்பதால் நமது உடலில் நோய் எதிர்பு சக்தி கிடைக்கிறது, இந்நிலையில் கரும்புச்சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
நன்மைகள்:
கரும்பு சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது. பொதுவாக மஞ்சள் காமாலை வந்தால், சருமம் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இதற்கு காரணம், பிலிரூபின் இரத்தத்தில் கலந்திருப்பதே ஆகும். இதற்கு இரண்டு டம்ளர் கரும்பு சாற்றுடன் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.
கரும்பின் நன்மைகளிலேயே முக்கியமான ஒன்று என்றால் அது சிறுநீரக கற்களை குணமாக்குவது தான். எனவே தண்ணீர் மட்டுமின்றி, கரும்பு சாற்றையும் குடித்தால், அந்த கற்கள் எளிதில் உடைந்து கரைந்துவிடும்.
கரும்பில் இயற்கையாக உள்ள அல்கலைன் என்னும் பொருள், மற்றும் புற்றுநோயை குணப்படுத்தும் தன்மையுடையது. குறிப்பாக பெருங்குடல், நுரையீரல் அல்லது மார்பக புற்றுநோய் போன்றவற்றிற்கு சிறந்தது.
நிறைய மக்கள் அதிக அளவு தண்ணீர் குடிப்பதை விரும்ப மாட்டார்கள். எனவே அத்தகையவர்களுக்கு உடலில் ஏற்படும் வறட்சியை நீக்க கரும்பு சாற்றை குடிப்பது மிகவும் நல்லது.