தினமும் ஒரு டம்ளர் ஓமம் நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.!
தினமும் ஒரு டம்ளர் ஓமம் நீர் குடிப்பதால் ஆஸ்துமா நோய் குணமாகும்.
ஓமத்தில் கால்சியம் பொட்டாசியம் இரும்புச்சத்து பாஸ்பரஸ் , கரோட்டின் தயான் போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கிறது .மேலும் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு பசி அதிகமாக இருக்கும் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆக ஓமத்தை தொடர்ந்து சாப்பிடால் மிகவும் நல்லது மேலும் வயிறு சம்பந்தமான கோளாறுகள் பிரச்சனை நீங்குவதற்கும் உதவுகிறது.
நன்மைகள்;
ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலுக்கு ஏராளமான சத்துக்கள் கிடைக்கிறது, மூட்டு வலிகளால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு டம்ளர் ஓமம் நீர் அருந்துவதால் உங்களுடைய எலும்பு வலிமையாகி உங்கள் உடலிற்கு ஒரு வலிமையைத் தருகிறது .
மேலும் ஆஸ்துமா நோய் இருப்பவர்கள் ஓமம் நீரை தொடர்ந்து அருந்தி வந்தால் ஆஸ்துமா பிரச்சனை நீங்கும், மேலும் வயிற்று வலி ஏற்படுப வர்களுக்கு மிகவும் சிறந்த ஒரு மருத்துவப் பொருள் என்றால் ஓமம் என்று கூறலாம் , ஓமத்தை சூடான நீரில் கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மிகவும் நல்லது வயிறு சார்ந்த பிரச்சினைகளை நீங்கும்.
மேலும் மார்புச்சளி குணமாக ஓமம் நீரை தொடர்ந்து குடித்து வந்தால் மிகவும் நல்லது, பல் வலி ஏற்படும் போது ஓம எண்ணெயை பஞ்சில் தேய்த்து பல் மீது வைத்து வந்தால் பல்லை வலிமையாக்கி உங்கள் பல் பளபளவென்று ஜொலிக்கும் மேலும் ஓமம் நீரை தொடர்ந்து குடித்து வருவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.