வியக்கவைக்கும் வெண்டைக்காயின் பயன்கள்…!!! அடடே…… இவ்வளவு நன்மைகளா….?
வெண்டைக்காய் நம் அருகாமையில் உள்ள சந்தைகளில் விலை மலிவாக கிடைக்க கூடிய ஒரு காய்கறி தான். இது நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது மட்டுமல்லாமல் உடலில் உள்ள நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. இதில் அதிகமான சத்துக்கள் உள்ளது.
சத்துக்கள் :
வெண்டைக்காயில் கலோரி, கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ,சி, இ,கே மற்றும் கால்சியம், இரும்பு என பல சத்துக்கள் உள்ளது.
பயன்கள் :
- கர்ப்பிணிபெண்களுக்கு மிக அவசியமான ஃபோலிக் அமிலம் இதில் அதிகமாக உள்ளது. இது குழந்தைகளின் நரம்பு குழாய்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
- வெண்டைக்காயில் உள்ள வழவழப்பில் உள்ள நார்சத்து வயிற்று உபாதைகளை நீக்க கூடிய ஆற்றல் கொண்டது.
- கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துகிறது.
- இதய நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.
- புற்றுநோய்க்கு காரணமான செல்கள் உருவாகுவதை தடுக்கிறது.
- ஆஸ்துமாவின் தீவிரத்தை குறைக்க கூடியது.
- இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
- உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
- பார்வை திறனை அதிகரிக்க செய்கிறது.