மங்குஸ்தான் பழத்தின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்!
பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மங்குஸ்தான் பழம் உலகெங்கிலும் அந்தந்த நாட்டின் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்றவாறு செடிகளாக அல்லது மரங்களாக வளரக்கூடிய தன்மை படைத்தது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் விளையக்கூடிய இந்த மங்குஸ்தான் பழத்தில் ஏகப்பட்ட நன்மைகளும் அதிகப்படியான மருத்துவ குணங்களும் உள்ளன. அவைகளை நாம் பார்க்கலாம் வாருங்கள்.
மங்குஸ்தான் பழத்தின் நன்மைகள்
மிகவும் ஒல்லியாக இருக்கிறேன் என்று வருத்தப்படுபவர்கள் நிச்சயம் இந்த மங்குஸ்தான் பழத்தை எடுத்துக்கொள்ளலாம். தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் சீக்கிரம் உடல் எடை கூடி உடலில் நல்ல சத்துக்கள் கிடைக்கும். இதில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் வெளியிலிருந்து வரக்கூடிய நோய் கிருமிகள் உடலை தாக்காதவாறு எதிர்த்துப் போராடக் கூடிய சக்தியை உடலுக்கு அளிக்கிறது.
மூலம் நோய் மற்றும் நாள்பட்ட மலச்சிக்கல் உஷ்ணம் நிறைந்த சூழலில் அதிகம் இருப்பதாலும் வெப்பத்தை அதிகப்படுத்தக்கூடிய கோழி இறைச்சி மற்றும் தேவையற்ற உணவுகளை உண்பதாலும் தான் ஏற்படுகிறது. இந்நிலையில் இந்த மங்குஸ்தான் பழத்தை சாப்பிடும் பொழுது எந்த ஒரு மூல நோயாக இருந்தாலும் விரைவில் குணமடையும். இந்த பழத்தில் ஒமேகா 6 எனும் வேதிப்பொருள் இருப்பதால் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இதில் உள்ள பெக்டின் எனப்படும் நார்ச்சத்து உடலில் இருக்கக்கூடிய அதிகப்படியான கொலஸ்ட்ராலையும் சமப்படுத்த உதவுகிறது.