கார்களில் ஹேண்ட் பிரேக் ஃபெய்லியர் ஆனதைக் குறிக்கும் 5 முக்கிய அறிகுறிகள்…!

Default Image

கார்களில் ஹேண்ட் பிரேக்  (ஃபெய்லியர்) செயலிழப்பதை குறிக்கும் 5 முக்கிய அறிகுறிகள் குறித்து கீழே காண்போம்:

பொதுவாக ஹேண்ட் பிரேக், கார்களை நிறுத்திய பின்னர்,கார்கள் நகராமல் இருக்கவும்,செங்குத்தான மற்றும் மலைப் பகுதிகளில் நிறுத்தும்போது வாகனங்கள் நகராமல் இருக்கவே பயன்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக,சில இக்கட்டான நேரங்களில் விபத்தைத் தவிர்க்கும் பொருட்டும் ஹேண்ட் பிரேக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய முக்கியமான ஹேண்ட் பிரேக்கை முறையாக  பராமரிப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கின்றது.ஆனால்,பெரும்பாலானோர் இதனைக் கடைப்பிடிப்பது இல்லை.இதனால்,ஹேண்ட்-பிரேக் (ஃபெய்லியர்) செயலிழக்கின்றன.

ஹேண்ட்-பிரேக் (ஃபெய்லியர்) செயலிழப்பதை குறிக்கும் 5 முக்கிய அறிகுறிகள்:

  • இருக்கமான (Tight) ஹேண்ட் பிரேக்:

ஹேண்ட் பிரேக் இருக்கமாக இருக்கின்றது என்றால் அது பிரேக் ஒயரில் ஏற்பட்டிருக்கும் கோளாறை குறிக்கிறது.இதனால்,அவசர காலங்களில் ஹேண்ட்-பிரேக்கை பயன்படுத்த முடியாத நிலை உருவாகும். இது தேவையற்றை இன்னல்களை உருவாக்க நேரிடும்.அதேவேலையில் இருக்கமாக ஹேண்ட் பிரேக் இருக்குமானால் அது டயர்களையும் சேதப்படுத்தி விடும்.எனவே,ஆகையால், காரில் ஹேண்ட்-பிரேக் அதிக இருக்கமான நிலையில் இருந்தால் உடனடியாக மெக்கானிக்கை அணுகுவது மிக சிறந்தது.

  • மிகவும் தளர்வான ஹேண்ட் பிரேக்:

வழக்கத்திற்கு மாறாக  மிகவும் தளர்வாகவும் (too loose) ஹேண்ட்-பிரேக்குகள் செயல்படக் கூடாது. பிரேக் ஒயர் சரியான அலைன்மென்டில் இல்லை என்பது இது உணர்த்துகிறது. இதனாலும் ஹேண்ட்-பிரேக் சில நேரங்களில் எதிர் விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால், வழக்கத்திற்கு மாறாக மிகவும் லேசாகவும் ஹேண்ட்-பிரேக் செயல்பட்டாலும் அதை உடனடியாக கவனிப்பது நல்லது.

  • ஹில் டெஸ்ட்:

உங்கள் ஹேண்ட்பிரேக் சிறப்பாக வேலை செய்கிறதா என்பதைக் கண்டறிய ஒரு சிறந்த வழி உண்டு.அதாவது, ஓர் சாய்வான அல்லது மலையின் இறக்க பாதையில் ஹேண்ட் பிரேக் போட்டு காரை நிறுத்த வேண்டும். கார் சிறிதளவுகூட நகராமல் இருந்தால் உங்களின் ஹேண்ட் பிரேக் நல்ல முறையில் இருக்கின்றது என்று அர்த்தம். மாறாக, சிறிதளவு நகர்ந்தால்கூட அதில் ஏதோ பழுது ஏற்பட்டிருக்கின்றது என்றே அர்த்தம்.

  • பிரேக் அடிக்கும் போது எதிர்ப்பு இல்லாமல் இருப்பது (No resistance when braking): 

தற்செயலாக ஹேண்ட்-பிரேக்கில் இருக்கும்போதே காரை எடுக்க நேர்ந்திருக்குமானால், அப்போது, ஏதாவது இடையூறை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்.அப்படி நீங்கள் அதைச் சந்திக்கவில்லை என்றால் உங்களின் ஹேண்ட்-பிரேக்கில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்கின்றது என்று அர்த்தம். அதேவேலையில், ஹேண்ட் பிரேக் போட்டவாறு காரை பயன்படுத்தினால் சில கோளாறுகளை ஏற்படுத்த வழி வகுக்கும்.

  • பிரேக் செய்யும் போது ஹேண்ட்பிரேக் விலகாமல் இருப்பது:

சில நேரங்களில் ஹேண்ட் பிரேக்கை விளக்கிய பின்னரும் வாகனம் அழுத்தமாக (பிரேக் பிடித்தவாறு) செல்லும். இது ஹேண்ட்-பிரேக் வீல்களை விட்டு விலகாத நிலையை குறிக்கிறது. இதுவும், ஹேண்ட் பிரேக் செயலற்று போனதற்கான அடையாளம் ஆகும். ஹேண்ட் பிரேக்கில் ஏற்பட்ட கோளாறே இதற்கு காரணம் ஆகும். நீண்ட நாள் கார் நிறுத்தி வைக்கும்போது ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்துவதனால் இத்தகைய நிலை உருவாகும். எனவேதான் நீண்ட நாட்கள் காரை நிறுத்தும்போது அவ்வப்போது சிறிது நேரம் காரை இயக்கி பார்க்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்