நீச்சல் வீரர்களை பின்தொடர்ந்த சுறா.! கையால் குத்திவிட்டு உயிர்பிழைத்த வீரர்கள்.!

ஆஸ்திரேலியா, விக்டோரியாவில் உள்ள பெல்ஸ் கடற்கரையில் நீச்சல் நடித்துக்கொண்டிருக்கும் போது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டிலான் என்கிற நீச்சல் வீரரின் காலைசுறா மீன் கடித்துள்ளது.
ஆஸ்திரேலியா, விக்டோரியாவில் உள்ள பெல்ஸ் கடற்கரையில் நீச்சல் வீரர்கள் நீச்சல் சாகசங்கள் செய்வது வழக்கம். அதே போல 2 நீச்சல் வீரர்கள் கடலில் நீச்சல் அடித்துக்கொண்டு வந்துள்ளார்.
அவர்களை ஒரு சுறா மீன் பின் தொடர்ந்துள்ளது. அந்த சுறா, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டிலான் என்கிற நீச்சல் வீரரின் காலை கடித்துள்ளது. இதனை கண்டு பதறிய அந்த நீச்சல் வீரர், சுறாவின் மேற்பகுதியில் கையால் குத்திவிட்டு ரத்த காயத்துடன் உதவி கேட்டுள்ளார். இதனை பார்த்த இன்னோர் நீச்சல் வீரர் அவரை மீட்டு கரை சேர்த்துள்ளார்.