நம்பி இருந்தேன்! மேனேஜரே கெடுத்து விட்டார்!
- மலையாளத்தில் மொழி பிரச்னையை சமாளிக்க மேனேஜர் வைத்துக் கொண்டேன்.
- சுயநலத்துக்காக என் கேரியரை கெடுத்துவிட்டார்.
நடிகை மீரா வாசுதேவன், தமிழ் சினிமாவில் உன்னை சரணடைந்தேன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் மலையாளத்தில் ‘தன்மத்ரா’ படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து இவர் நடித்த அணைத்து படங்களுமே தோல்வியில் தான் முடிந்தன. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மலையாளத்தில் மொழி பிரச்னையை சமாளிக்க மேனேஜர் வைத்துக் கொண்டேன். அந்த மேனேஜரை நம்பி கதை கேட்காமலே நடித்தேன். ஆனால்,அவர் தன் சுயநலத்துக்காக என் கேரியரை கெடுத்துவிட்டார்.’ என கூறியுள்ளார்.