பெல்ஜியம் உயிரியல் பூங்கா : இரண்டு நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று உறுதி …!

பெல்ஜியம் உயிரியல் பூங்காவில் இரண்டு நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் பரவி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது. தற்பொழுது வரையிலும் இந்த வைரஸின் தாக்கம் குறையாத நிலையில், மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் இந்த கொரோனா தொற்று பரவி வருகிறது.
அந்த வகையில் பெல்ஜியத்தில் உள்ள வன உயிரியல் பூங்கா ஒன்றில் இரண்டு நீர் யானைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அங்கு உள்ள மற்ற சில உயிரினங்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நீர் யானைகளுக்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது குறித்து எதுவும் தகவல் தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025