கொரோனா நோயாளிகள் அனைவரும் குணமாகி வீடு திரும்பியதால் மூடப்பட்ட பீஜிங் மருத்துவமனை!

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியாக ஒதுக்கப்பட்டிருந்த பீஜிங் நகர் மருத்துவமனை இன்று மூடப்பட உள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரக்கூடிய கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் உள்ள உகைன் நகரில்தான் உருவாகியது. இந்நிலையில், சீனாவில் கடந்த 2003 ஆம் ஆண்டு சார்ஸ் எனும் வைரஸ் நோய் தாக்கியவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிப்பதற்காக பீஜீங் நகரில் சியோடாங்ஷன் என்ற பெயரில் தனியான ஒரு ஆஸ்பத்திரி உருவாக்கப்பட்டது.
அதன் பின்பு அந்த ஆஸ்பத்திரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரவிய கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக திறக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனைத்து நோயாளிகளும் குணமடைந்து வீடு திரும்பியதை அடுத்து புதன்கிழமை இன்று முதல் அந்த மருத்துவமனை மூடப்பட உள்ளதாக மருத்துவ துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உகைன் நகரில் கொரோனா நோய் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட 16 மருத்துவமனைகளில் இருந்த நோயாளிகளும் ஞாயிற்றுக்கிழமை குணமாகி வீடு திரும்பியதை அடுத்து 16 மருத்துவமனைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சீனாவில் மேலும் ஆறு பேருக்கு புதியதாக கொரோனா வந்திருப்பதாகவும், இதுவரை 40 பேருக்கு மீண்டும் கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024