காற்று மாசு பற்றி பேசுவதற்கு முன்பு, புகை பிடிக்கும் பழக்கத்தை விடுங்கள் ! பிரியங்கா சோப்ராவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நடிகை ப்ரியங்கா சோப்ரா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தளபதி விஜயுடன் இணைந்து தமிழன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் அதிகாமாக பாலிவுட் படங்களில் தான் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், இவர் தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த அவர் முகமுடியுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு, டெல்லியில் காற்று மாசுபாடுகளுக்கு இடையே கஷ்டப்பட்டு படப்பிடிப்பில் இருப்பதாக தெரிவித்திருந்தார். இதற்கு கமெண்ட் செய்த நெட்டிசன்கள், நீங்கள் தினமும் குடிக்கும் சிகரெட்டே உங்களை எதுவும் செய்யவில்லை. புகை என்ன செய்யப்போகிறது என கமெண்ட் செய்துள்ளனர்.