சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதாற்கு முன்பதாக, இத்தாலியில் கொரோனா வைரஸ் புழக்கத்தில் இருந்துள்ளது!
சீனாவில் கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்படுவதற்கு முன்பதாகவே, வடக்கு இத்தாலியில் புழக்கத்தில் இருந்ததாகக் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இன்று உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் பரவியதாக தான் இதுவரை அனைவரும் கூறி வருகிறோம். ஆனால், இதற்கு மாறாக, கடந்த 2019 டிசம்பரில் மிலன் மற்றும் டுரினிலிருந்து சேகரிக்கப்பட்ட கழிவுநீரில் புதிய கொரோனா வைரஸின் தடயங்களை இத்தாலியில் உள்ள விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்படுவதற்கு முன்பதாகவே, வடக்கு இத்தாலியில் புழக்கத்தில் இருந்ததாகக் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 2019 மற்றும் பிப்ரவரி 2020 க்கு இடையில் வடக்கு இத்தாலியில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 40 கழிவுநீர் மாதிரிகளை இத்தாலிய தேசிய சுகாதார நிறுவனம் சோதனை மேற்கொண்டதில் இது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், நெதர்லாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் பிற இடங்களில் விஞ்ஞான குழுக்கள் நடத்திய சிறிய ஆய்வுகள், கோவிட் -19 ஐ ஏற்படுத்தும் வைரஸை கழிவுநீரில் கண்டறிய முடியும் என்பதற்கான அறிகுறிகளைக் கண்டறிந்துள்ளன.