சின்னத்திரை நயன்தாராவின் அழகான புகைப்படங்கள்..!

வாணிபோஜனின் அழகான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் தெய்வமகள் தொடரின் மூலம் பிரபலமான வாணிபோஜன் ஓ மை கடவுளே படத்தின் மூலம் சினிமாயுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். தற்போது இவர் நிதின் சத்யா தயாரிப்பில் உருவாகும் ‘லாக்கப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக வைபவ் அவர்களும், வில்லனாக வெங்கட் பிரபு அவர்களும் நடிக்கின்றனர்.
மேலும் விதார்த் அவர்கள் நடித்து தயாரிக்கும் படத்திலும், சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் படத்திலும், கவிஞரான கண்ணதாசன் அவர்களின் பேரரான ஆதவ் கண்ணதாசன் நடிக்கும் திகில் படம் ஒன்றிலும், விக்ரம் பிரபு நடிக்கும் படத்திலும் கமிட்டாகியுள்ளார் வாணிபோஜன்.வழக்கமாக புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையில் கியூட்டான சிரிப்புடன் அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025