மதங்களை கடந்த மனிதம்.! ஜெருசேலத்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்.!

கொரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தி வீட்டிற்குள் முடக்கி போட்டிருந்தாலும், பொதுமக்களை அவர்கள் குடுமபத்தினரோடு அதிக நேரம் செலவிட வைத்துள்ளது. மத இனம் பேதமின்றி அனைவரிடம் பழக வைத்துள்ளது. விலங்குகள், பறவைகள் சுதந்திரமாக மனிதர்கள் இடையூறுகள் இன்றி சுற்றி வருகின்றன.
இந்த நேரத்தில் ஜெருசேலத்தில் மதங்களை கடந்த மனிதம் வெளிப்பட்டு இருக்கிறது. அந்த நெகிழ்ச்சி சம்பவம் உலகம் முழுக்க பரவி மாதங்களுக்கு அப்பாற்பட்டது மனிதம் என உணர்த்த தொடங்கியுள்ளது.
ஜெருசேலத்தில் மருத்துவ ஊழியர்களாக பணியாற்றி வரும் யூத மதத்தை சேர்த்த அவர்ஹம் பிண்ட்ஸும், இஸ்லாமியரான ஜோஹர் அபுவும் ஒரே இடத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று இருவரும் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது,
அப்பணிகளுக்கு இடையே இருவரும் தங்கள் மத பிராத்தனைகளை ஒரே இடத்தில் ஒன்றாக வழிபட்டனர். யூதரான அவர்ஹம் பிண்ட்ஸ் ஜெருசேலத்தை பார்த்த வண்ணமும், இஸ்லாமியரான ஜோஹர் அபு மெக்காவை பார்த்த வண்ணமும் தங்கள் பிரார்த்தனைகளை மேற்கொண்டனர். மதங்களை கடந்த மனிதம் பாராட்டப்பட்டு வருகிறது.