அடுத்த ஆண்டு பீஸ்ட் பொங்கல்..! தளபதி ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.!
விஜய் நடித்து வரும் பீஸ்ட் படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் “பீஸ்ட்”. இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், பீஸ்ட் படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளதால் வேகமாக பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் யோகி பாபு, வி.டி.வி கணேஷ், அபர்ணா தாஸ், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படதிற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.