விஜய் நடிக்கும் பீஸ்ட் மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியுள்ளது.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிக்கப்பட்டு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கப்பட்டு முடிவடைந்து.
இதனை தொடர்ந்து மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியுள்ளது. பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்காக மும்பை சென்ற பூஜா ஹெக்டே நேற்று மீண்டும் சென்னை வந்தடைந்தார். இன்று முதல் படப்பிடிப்பை தொடங்கி அதிரடி சண்டைக்காட்சிக்காக மட்டும் ரஷ்யாவில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விறு விறுவென படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியீட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…
சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில்…
டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி…
கொழும்பு : இலங்கை vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வெறும் 165 ரன்களுக்கு…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள…
தேனி : அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதாவது, எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு…