ராக்ஸ்டார் பிறந்த நாள் பரிசாக “பீஸ்ட்” முதல் பாடல்..??

Default Image

பீஸ்ட் படத்தின்  முதல் பாடல் வருகின்ற அக்டோபர் 16 ஆம் தேதி அனிருத் பிறந்த நாளை முன்னிட்டு வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் “பீஸ்ட்” . இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். யோகி பாபு, வி.டி.வி கணேஷ், அபர்ணா தாஸ், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள்.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மிகவும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் இரண்டு லுக் போஸ்ட்டர்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அடுத்ததாக “பீஸ்ட்” படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம் பீஸ்ட் படத்தின்  முதல் பாடல் வருகின்ற அக்டோபர் 16 ஆம் தேதி அனிருத் பிறந்த நாளை முன்னிட்டு வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை குறித்த அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்