ஜெர்மனியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அந்நாட்டின் பிரதமர் ஏஞ்சலா மெர்கல், உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜெர்மனியில் கொரோனா தொற்று முன்பை விட தற்பொழுது வேகமாக பரவி வருகிறது.இப்படி அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுகளைத் தடுக்கும் முயற்சியில் கடுமையான புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நாட்டின் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் 6 மாநில ஆளுநர்களுடன் ஒரு நீண்ட வீடியோ கான்ஃபெரன்ஸில் ஆலோசனைக்கு பின்பு கூறிய அவர் ,கொரோனா பரவல் மிகவும் தீவிரமாக இருப்பதாகவும் நாம் மிகவும் எச்சரிக்கியாக இருக்கபி வேண்டிய தருணம் என்றார்.இல்லையெனில் நாம் ஒரு குறுகிய தளர்வுக்குப் பிறகு மீண்டும் ஊரடங்கை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார்.
இந்த ஊரடங்கில் கடைகள் மற்றும் உணவகங்கள் ஜனவரி இறுதி வரை முற்றிலும் மூடப்படுகிறது. பள்ளிகள் மூடப்படுவதால் வகுப்புகள் ஆன்லைனில் நடைபெறும் என்றும் , குறைந்தது இந்த மாத இறுதி வரை தொடரும் என்று மெர்கல் கூறினார்.
ஜெர்மனியில் நேற்று மட்டும் 11,897 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.787 மில்லியனாக அதிகரித்துள்ளது.இறந்தவர்களின் என்னைகை 944 அதிகரித்து 35,318 ஆக உயர்ந்துள்ளது.
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் தொடர் கைது நடவடிக்கை, மீனவ குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும், எல்லை தாண்டி…
சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் சுரங்க…
தெலங்காணா: கடந்த டிசம்பர் 4-ம் தேதி 'புஷ்பா 2' சிறப்பு காட்சியின் திரையிடலின் போது, சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட…
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…