பெண்களே இந்த விஷயத்தில் கவனமாக இருங்கள்.
- ஆரோக்கியமான சமுதாயம் அமைய, பெண் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
- பெண்கள் தங்களது வாழ்வில்சந்திக்கும் பிரச்சனைகளால் மிக முக்கியமான பிரச்னை தான் இந்த மாதவிடாய் சுழற்சி.
இன்றைய சமுதாயத்தினர் பெண் பெலகீனமானவள், அவளால் எதுவும் செய்ய இயலாது என்று பலரும் கருதுவதுண்டு. ஆனால், பெண்களை பொறுத்தவரையில், அவர்களால் முடியாதது என்று ஒன்றும் இருப்பதில்லை.
முற்காலத்தில் இருந்த பெண்ணடிமை தனம் சில இடங்களில் இன்றும் நிலவுகிறது. ஆனால், இன்றைய நிலையில், பெண்கள் ஆண்களை விட உயரிய இடத்தில் தான். உள்ளனர் ஆண்களுக்கு சமமாக எங்களாலும் வாழ முடியும் என்று வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கின்றனர்.
ஆரோக்கியம்
ஆரோக்கியமான சமுதாயம் அமைய, பெண் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது மறுக்கமுடியாத உண்மை. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும் என்பது ஒரு பிரபலமான பழமொழி.
அதற்கு என்ன அர்த்தமென்றால், தன் மகனை மணந்து இல்லத்திற்கு வரும் பெண். அவள் ஆரோக்கிய உணவு உண்டு வளர்ந்தால் அவள் வயிற்றில் வளரும் தன் குல பிள்ளை தானே ஆரோக்கியமாக வளரும் என்பதே இதன் பொருள்.
மாதவிடாய் சுழற்சி
பெண்கள் தங்களது வாழ்வில்சந்திக்கும் பிரச்சனைகளால் மிக முக்கியமான பிரச்னை தான் இந்த மாதவிடாய் சுழற்சி.
இந்நிலையில், ஒரு குறிப்பிட்ட வயதில், பூப்பெய்துவதற்குத் தேவையான ஹார்மோன்களும் உடலில் பொதிந்து இருக்கும். உரிய காலத்தில் இது சுரக்கத் தொடங்கும். குறிப்பிட்ட வயது வந்தவுடன் தூண்டப்பட்டு, மெதுவாக வெளிப்படத் தொடங்கும். கருமுட்டைபை இயக்கி, மேலும் சில இயக்கங்களுக்குப் பிறகு மாதவிடாய் தோற்றுவிக்கப்படுகிறது.
இந்நிலையில், முதல் முறை மாதவிடாய் ஏற்பட்ட பின், இரண்டாவது சுழற்சி தள்ளிப் போகலாம். இதனால் பிரச்சினை ஒன்றுமில்லை. ஆனால், பொதுவாக ஒவ்வொரு மாதமும் 21 நாளில் இருந்து 35 நாட்கள் இடைவெளிக்குள் வர வேண்டும்.
இதில் மாறுபாடு ஏற்பட்டால் மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி முறையாக மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.
சத்தான உணவுகள்
நமது உடலில் உள்ள பெலவீனங்கள் மற்றும் இரத்த குறைபாடு காரணமாக தான் இந்த பிரச்னை ஏற்படுகிறது. புரதச் சத்து, இரும்புச் சத்து மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
முளைவிட்ட பயறு, மீன், இறைச்சி மற்றும் தானிய வகைகள் போன்ற உணவுகளை தொடர்ந்து உண்டு வந்தால் நமது உடல் ஆரோக்கியத்தை நாம் மேம்படுத்துவது மட்டுமல்லாமல், மாதவிடாய் பிரச்சனைகளையும் நீக்குவதில் முக்கிய பங்காருக்கிறது.