ராஜபக்சேகளுக்கு இலங்கையை விட்டு வெளியேற தடை நீட்டிப்பு… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
ஆகஸ்ட் 2ஆம் தேதி வரையில் பசில் ராஜபக்சே மற்றும் மஹிந்த ராஜபக்சே ஆகியோர் இலங்கையை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டஅரசியல் மாற்றம் இதுவரை அங்கு ஏற்பாடாத ஒன்று. அமைச்சர்கள் தொடர் ராஜினாமா, இலங்கை அதிபர் இலங்கையை விட்டு தப்பி ஓட்டம் என எதிர்பாரா திருப்பங்கள் அரங்கேறின.
இதில் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தயபய ராஜபக்சே எப்போது திரும்பி வருவார் என உறுதியாக தெரியாத நிலையில், மற்ற ராஜபக்சேகளான பசில் ராஜபக்சே மற்றும் மஹிந்த ராஜபக்சே ஆகியோர் இலங்கையை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அவர்கள் இலங்கையை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரையில் பசில் ராஜபக்சே மற்றும் மஹிந்த ராஜபக்சே ஆகியோர் இலங்கையை விட்டு வெளியேற தடை விதித்து இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.