திருவண்ணாமலையில் அரோகரா கோஷத்துடன் ஏற்றப்பட்டது பரணி தீபம்..!

Default Image

திருவண்ணாமலை கார்த்திரை தீபத்திருவிழாவையொட்டி 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில்  இன்று மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. திருவண்ணாமலை அண்ணாம்லையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது.முக்கிய நிகழ்வான மகாதீபம் இன்று ஏற்றப்படஉள்ளது

அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு எல்லாம் பரணி தீபம் ஏற்றப்பட்டது.இந்த தீபமானது பஞ்ச பூதமும் நானே,நானே பஞ்ச பூதம் என்ற அடிப்படையில் ‘ஏகன் அநேகன்’ தத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் மூலவர் சன்னிதி முன்பு பரணி தீபம் ஏற்றப்படுகிறது.தங்கக் கொடி  மரம் முன்பு உள்ள அகண்டத்தில் தீபம்  ஏற்ற 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் சரியாக மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்