கனடாவுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டதை அடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டிற்கும் மேலாக, கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்த வைரசை தடுக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வகையில், இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என்ற தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அவசரகாலத் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது.
இதன்படி இந்தியாவில்,தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து, இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் இந்திய மக்களுக்கு மட்டுமல்லாது, வெளி நாட்டு மக்களுக்கும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்டை நாடுகளான, இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான், பூடான், மாலத்தீவுகள், பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் ஜமைக்கா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கும் தடுப்பூசிகள் தேவையின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கனடாவுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டதை அடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அந்நாட்டு இந்து அமைப்புகள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து, கிரேட்டர் டொரண்டா என்ற சாலையில் பெயர் பலகைகள் வைத்துள்ளனர். மேலும் அந்த பெயர் பலகையில், இந்தியா மற்றும் கனடாவின் அன்புறவு நீடிக்க வேண்டும் என்றும் அச்சிடப்பட்டுள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…