பேங்க் ஆஃப் பரோடா வாட்ஸ்அப் மூலம் வங்கி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையை அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர் அல்லாதவர்களும் பெறலாம்.
பேங்க் ஆஃப் பரோடா வாட்ஸ்அப் மூலம் வங்கி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையை அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர் அல்லாதவர்களும் பெறலாம். வாட்ஸ்அப்பில் வங்கி வசதியை செயல்படுத்த உங்கள் தொலைபேசியில் பாங்க் ஆஃப் பரோடா வாட்ஸ்அப் எண்ணை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். வங்கியின் வாட்ஸ்அப் எண் ’84 33 88 87 77′ இந்த வாட்ஸ்அப் வங்கி சேவையின் மூலம் இருப்பு விசாரணை, மினி ஸ்டேட்மெண்ட், காசோலை நிலை விசாரணை, காசோலை புத்தக கோரிக்கை, டெபிட் கார்டை தடுப்பது, வங்கியின் தயாரிப்பு மற்றும் சேவைகள் குறித்த தகவல்கள் டிஜிட்டல் தயாரிப்புகளுக்கு பதிவு செய்தல் அல்லது விண்ணப்பித்தல் போன்றவற்றை இந்த வங்கி சேவை வழங்கும்.
இதுகுறித்து இதன் இயக்குனரான குரானா கூறுகையில், ‘சமீபத்திய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எளிய மற்றும் புதுமையான வங்கி தீர்வுகளை மேம்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். சமூக ஊடகங்களின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதால், வாட்ஸ்அப் வங்கி, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வங்கி தேவைகளை பூர்த்தி செய்ய ஏராளமான வசதிகளை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த வங்கி சேவையானது எளிதான அணுகல் மற்றும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வசதிகளுக்கும் பயன்படும்.
ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் இரண்டிற்கும் வங்கி சேவை கிடைக்கிறது. வங்கி தொடர்பான எந்த ஒரு கேள்விகளுக்கும், பரோடா வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களும் அணுகலாம். உங்கள் வாட்ஸ் அப்பில் பேங்க் ஆஃப் பரோடா வங்கி சேவைகளை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…