அமெரிக்கா சாலையொன்றில் வங்கி பணத்தை எடுத்துச்சென்ற வாகனத்தின் கதவு திறந்து காற்றில் பணம் பறந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளூர் வங்கியிலிருந்து பணத்தை எஃப்.பி.ஐ-க்கு எடுத்து செல்லும் டிரக் வாகனத்தின் கதவு திறந்து சாலையில் பணம் பறக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து அவ்வழியாக சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் அனைவரும் வாகனத்தை நிறுத்திவிட்டு பணத்தை எடுக்க தொடங்கினர். இதனால் அந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும், சாலையில் கிடந்த பணத்தை எடுத்த நபர்களிடமிருந்து பணத்தை திரும்ப பெறும் முயற்சியில் அந்த நாட்டு காவல்துறை ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவில் யார் பணத்தை எடுத்தார்கள் என்பதை வைத்து திரும்ப பெற உள்ளனர். மேலும், பணத்தை எடுத்தவர்கள் திரும்ப தரவும் என்று வங்கி நிர்வாகம் அளித்த அறிவிப்பை முன்னிட்டு பலரும் எடுத்த பணத்தை திரும்ப செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், அந்த நெடுஞ்சாலையில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலமாக எந்த வாகனம் அந்த சாலை வழி சென்றுள்ளது என்பதை வைத்து பணத்தை எடுத்தவர்களிடமிருந்து காவல்துறையினர் திரும்ப பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்திற்கு பிறகு பணத்தை எடுத்து சென்ற ட்ரக் வாகனத்தை ஓட்டி சென்ற ஓட்டுநர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …