பானி பூரி யாருக்கு பிடிக்கும்..அப்போ ஒரு ஆபத்து..!!
‘பானி பூரி’ வட இந்திய தின்பண்டமாக இருந்தது. ஆனால் இப்பொது இந்தியாவில் உள்ளவர்களின் நொறுக்கு தின்பண்டங்களில் ஒன்றாக பானி பூரி இடத்தைபிடித்துள்ளது. தமிழகத்தில் எல்லா இடங்களிலும் தள்ளுவண்டியில் வைத்து கொண்டு கூடைகளில் வைத்தும் பானி பூரி விற்கப்படுகிறது. பானி பூரியானது புளிப்பு மற்றும் காரம் என்று நாக்கில் சுவையைத்தருகிறது பானி பூரி. மொறுமொறுவென இருப்பதால் அனைவருக்கும் பிடித்த ஒரு தின்பண்டமாக அமைகிறது.
தெரு கடைகள் முதல் கண்ணாடியால் மூடப்பட்ட பெரிய ஹோட்டல்கள் வரை இந்த பானி பூரியானது விற்கப்படுகிறது. இதை சாப்பிடுவது நல்லதா என்று கேட்டால் இல்லை. இதனால் ஏற்படும் தீமைகள் தான் அதிகமாக இருக்கின்றன. நாம் இதை தொடர்ந்து உணவாக சேர்த்துக்கொண்டால் உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என மருத்துவர்கள் கூறிகிறார்கள். மேலும் சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகிறார்கள்.
பானி பூரியை பாக்கெட்டுகளில் இருப்பதை நாம் கண்டுள்ளோம்.இது நல்ல முறையில் இது தயாரிக்கப்படுகிறதா என்று நமக்குத் தெரிவதில்லை. பொதுவாக அதிக அளவு சோடியம் நிறைந்த உணவுகளை உண்ணாமல் இருப்பது நல்லது. சர்க்கரை நோயாளி மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் முக்கியமாக கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. மேலும் பானி பூரியில் அதிகளவு சோடியம் இருப்பதினால் இந்த குறைபாடு உடையவர்கள் பானி பூரியை தவிர்ப்பது நல்லது.
பானி பூரியை எவ்வித கையுறையும் போடாமல் அதை உடைத்து அதில் உருளை கிழங்கை வைத்து உப்பு நீரில் முக்கி நிறைய இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த கையால் உடைத்து தண்ணீரில் முக்கிதருபவரின் கை எந்தளவு சுத்தமாக இருக்கிறது என்பது நமக்கு தெரியாது. நாம் அதை உண்ணும்போது பல்வேறு உடல் நலப்பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சில வகை புழுக்கள் கைகளிலிருந்து தான் பரவுகிறது என கூறப்படுகிறது. இதை உண்ணும் போது வயிற்றில் இப்புழுக்கள் உற்பத்தியாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
இதனால் ஏதெனும் நோய் இருப்பவரின் கைகளில் பாக்டீரியா தொற்று ஏதேனும் இருந்தால் அந்நோய் நாம் வாங்கி சாப்பிடும் பானி பூரியால் நமக்கும் ஏற்பட கூடும். மேலும் பானி பூரி அதிகம் சாப்பிடுவதால் டைபாய்டு ஏற்படுவதகு வாய்ப்பு அதிகம் உள்ளது. சுகாதாரத்துக்கு உத்தரவாதமில்லாத இத்தகைய உணவுகளைத் தவிர்ப்பது உடலுக்கு நல்லது.