வங்கதேச எம்.பி இந்தியாவில் படுகொலை.! வெளியான பரபரப்பு தகவல்கள்…

Bangladesh MP Anwarul Azim Anar

சென்னை: வங்கதேச எம்.பி அன்வருல் ஆசிம் அனார் மேற்கு வங்கத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே 12ஆம் தேதி வங்கதேசத்தை சேர்ந்த அவாமி லீக் கட்சியை சேர்ந்த அந்நாட்டு எம்.பி அன்வருல் ஆசிம் அனார் மருத்துவ காரணங்களுக்காக இந்தியா வந்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தனது நண்பர் வீட்டில் தங்கி இருந்த அனார் கடந்த 13ஆம் தேதி டெல்லி செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவரை காணவில்லை என கூறப்படுகிறது.

14ஆம் தேதிஅன்வருல் ஆசிம் காணாமல் போன நிலையில், அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் நியூ டவுண் பகுதியில் அன்வருல் ஆசிம் அனார் உடல் சடலமாக மீட்கப்பட்டார் என செய்திகள் வெளியாகின. ஆசிம் மரணத்தை வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஆசாதுஸ்மான் கான் உறுதிப்படுத்தினார்.

வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் அந்நாட்டு செய்தி நிறுவனத்தில் மேலும் கூறுகையில் , இந்த கொலையை செய்தது வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் தான் என்றும், இந்த கொலை வழக்கு தொடர்பாக இதுவரையில், 3 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்