இந்தியாவின் கொரோனா தடுப்பூசியை சோதனை செய்ய ஆர்வத்துடன் தயாராகும் பங்களாதேஷ்!
இந்தியாவில் உருவாகி வரக்கூடிய கொரோனா தடுப்பூசியை பல்வேறு கட்டமாக சோதிக்க ஆர்வத்துடன் தயாராகிக்கொண்டிருக்கும் பங்களாதேஷ்.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் இந்த கொரானா வைரஸ்க்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் பல ஆய்வகங்களில் ஆராய்ச்சிகள் நடந்து, இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் உருவாகிக்கொண்டிருக்கும் கொரானா தடுப்பூசியை பல கட்ட சோதனைகளில் ஈடுபடுத்துவதற்கு ஆர்வத்துடன் பங்களாதேஷ் தயாராகி வருகிறது.
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தலைநகர் டாக்காவுக்கு சென்று பிரதமர் ஷேக் ஹசீன் அவர்களை சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து பங்களாதேஷின் வெளிநாட்டு அமைச்சக செய்தி குறிப்பில், தடுப்பூசி பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு பங்களாதேஷ் தயாராக உள்ளதாகவும், விரைவில் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.