கர்ணன் படத்தில் இடம்பெற்ற பண்டாரத்தி புராணம் பாடல் இன்று மாலை 5.03 க்கு வெளியாகவுள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ராஜீஷா விஜயன் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.
இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து இந்த படத்திலிருந்து முதல் பாடலான கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து படத்திற்கான இரண்டாவது பாடலை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஆம் கர்ணன் படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை 5.03க்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இதனை தொடர்ந்து தற்போது படத்தின் இயக்குனரான மாரி செல்வராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் ” ஏமராஜா கதற கர்ணன் தாண்டவமாடும் “பண்டாரத்தி புராணம்” இன்று மாலை” என்று குறிப்பிட்டு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…
டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…