வடகொரியாவில் வெளிநாட்டு திரைப்படங்கள் பார்க்க தடை…! மீறினால் மரண தண்டனை…!

Published by
லீனா
  • தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளை சேர்ந்த திரைப்படங்களின் வீடியோக்களை கடத்தி வருபவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.
  • வெளிநாட்டு படங்களைக் காண்போருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

பொதுவாகவே மக்கள் தங்களது பொழுதுபோக்காக வைத்திருப்பது திரைப்படங்களைப் பார்ப்பது தான். தற்போதுள்ள வளர்ச்சியின் காரணமாக வெளிநாடுகளில் உருவாகிற திரைப்படங்களை கூட நமது தொலைபேசியிலேயே கண்டு விடலாம். ஆனால் வட கொரியாவில் வெளிநாட்டு திரைப்படங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவை பொருத்தவரையில் அந்நாட்டு அரசு பல்வேறு வித்தியாசமான சட்டங்களை இயற்றி வருகிறது. வட கொரிய மக்கள் சீன எல்லை வழியாக கடத்தி வரப்படும் சிடிக்கள் மூலமாக தான் வெளிநாட்டு திரைப்படங்களை கண்டு ரசித்து வருகின்றனர். இந்நிலையில் வெளிநாட்டு படங்களை காண்பதால் மக்களிடம் அதன் தாக்கம் அதிகரித்து, அரசுக்கு எதிராக கேள்வி எழுப்ப தொடங்குவார் என்று அந்நாட்டு அரசு அஞ்சுகிறது.

எனவே வெளிநாட்டு படங்களை விற்பவர்கள், பரப்புபவர்கள், காண்பவர்களை கண்டறிந்து தண்டனை வழங்கும் சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தி உள்ளது வடகொரிய அரசு. இதன்படி தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளை சேர்ந்த திரைப்படங்களின் வீடியோக்களை கடத்தி வருபவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்றும், வெளிநாட்டு படங்களைக் காண்போருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் கிம் ஜாங் உன் அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

Published by
லீனா

Recent Posts

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

12 minutes ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

35 minutes ago

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

46 minutes ago

இரண்டாம் முறையாக கர்ப்பமான சிம்பு பட நடிகை.! சனா கானுக்கு குவியும் வாழ்த்துக்கள்…

சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…

49 minutes ago

INDvAUS: முதல் நாளில் செக் வைத்த ஆஸ்திரேலியா… தரமான பதிலடி கொடுத்த இந்தியா!

பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…

1 hour ago

2025ம் ஆண்டுக்கான அரசு பொதுவிடுமுறை நாட்கள் வெளியானது!

சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…

2 hours ago