இன்று முதல் இந்திய விமானங்களுக்கான தடை நீக்கம்….! – கனடா அரசு
இன்று முதல் இந்திய விமானங்களுக்கான தடையை நீக்கி கனடா அரசு அனுமதி அளித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் ஒவ்வொரு நாடும் தங்களது மக்களை தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி பல நாடுகளில் இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், கனடா அரசு, இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை உருவான ஏப்ரல் மாதத்திலிருந்து இந்திய பயணிகள் விமான சேவையை தடை செய்துள்ளது. மேலும், இந்த உத்தரவை பல முறை நீட்டித்து உத்தரவு பிறப்பித்து வந்த நிலையில் இன்று முதல் இந்தியாவில் இருந்து பயணிகள் விமானங்கள் தடையின்றி இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவிலிருந்து பயணிகள் விமானம், பயணிகள் 27ம் தேதி முதல் கனடாவுக்கு வரலாம். பயணிகள் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், பயணத்துக்கு 18 மணிநேரத்துக்கு முன்பாக அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக் மையத்தில் கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.’ தெரிவித்துள்ளது.
அதன்படி, வரும் 30-ம் தேதி முதல் ஏர் இந்தியா சார்பில் கனடாவுக்கு விமான சேவை தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.