ஜம்மு – காஷ்மீரில் 4ஜி இணைய சேவைக்கான தடை ஜன.8 வரை நீட்டிப்பு!

உதம்பூர் மற்றும் காண்டர்பால் மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களுக்கு, ஜனவரி 8ஆம் தேதி வரை இணைய சேவை தடை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் டிசம்பர் 25-ஆம் தேதி வரை 4ஜி இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், உதம்பூர் மற்றும் காண்டர்பால் மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களுக்கு, ஜனவரி 8ஆம் தேதி வரை இணைய சேவை தடை நீடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காஷ்மீர் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உதம்பூர் மற்றும் காண்டர்பால் மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் இணைய வேகம் தொடர்ந்து 2ஜி- க்கு கட்டுப்படுத்தப்படும் என்றும், ஜனவரி 8ஆம் தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் எல்லையை தாண்டி ஊடுருவ முயற்சிப்பதாகவும், அதிவேக இணைய தடைகள் அவ்வாறு செய்வதற்கான முயற்சிகளை தடுத்து உள்ளதாகவும் தகவல்கள் உள்ளது என ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் இணைய சேவை நிறுத்துவது குறித்து கருத்து தெரிவித்துள்ள நிலையில், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பாரூக் அப்துல்லா பொதுமக்கள், மாணவர்கள், வணிகர்கள் மற்றும் பலர் இணைய கட்டுப்பாடுகள் காரணமாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே உடனே வழங்குமாறு அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025