பாலாஜி-ஷிவானி ,ஆஜித்-கேப்ரில்லா என ஜோடி போடும் பிக்பாஸ் ஜோடி புறாக்கள்.!

Default Image

பிக்பாஸில் ஜோடியாக செங்கல்லை நகர்த்தி ஒருவரும் ,மற்றொருவர் அதன் மீது நடந்து இலக்கை அடையும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது .

பிக்பாஸ் வீடானது இந்த வாரம் தீபாவளி பண்டிகைக்காக களைக்கட்டி வருகிறது .  வித்தியாசமான டாஸ்குகளை கொடுக்க போட்டியாளர்கள் சண்டை , சச்சரவுகளை ஏற்படுத்தினாலும் உற்சாகமாக ஒவ்வொரு டாஸ்கையும் செய்து வருகின்றனர் .

அந்த வகையில் இன்றைய மூன்றாவது புரோமோவில் வேடிக்கையான டாஸ்க் ஒன்றை பிக்பாஸ் கொடுத்துள்ளார் . ஜோடியாக நடக்கவிருக்கும் இந்த டாஸ்கில் கொடுக்கப்பட்ட தூரத்தை செங்கலின் மேல் ஒருவர் நடக்க மற்றொருவர் செங்கலை நகர்த்தி உதவி செய்ய வேண்டும் . எந்த ஜோடி குறைந்த நேரத்தில் குறிப்பிட்ட தூரத்தை கடக்குகிறார்களோ அந்த ஜோடியே இந்த டாஸ்க்கின் வெற்றியாளர் .

இந்த டாஸ்கில் ரமேஷ்-சுசித்ரா, சோம் – ரம்யா, ரியோ-நிஷா, பாலாஜி-ஷிவானி, ஆஜித்-கேப்ரில்லா ஆகியோர் ஜோடியாக விளையாடுகின்றனர். சற்று சுவாரசியமாகவும் , உற்சாகமாகவும் இந்த டாஸ்க் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இதிலும் ஏதாவது சண்டையை இழுத்து விடுகிறார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்