தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடங்கி பெய்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் என பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் ஏற்கனவே தமிழகத்திற்கு ஆரஞ்ச்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது.
மழை நிலவரம் குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பல்வேறு வானிலை தகவல்களை தெரிவித்தார்.
ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு.! ரெட் அலர்ட் – அதிகனமழை அறிவிப்பு.!
அவர் கூறுகையில், தமிழக கடற்கரை பகுதியில் வரும் 26ஆம் தெற்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40-45 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்றும், வரும் 27ஆம் தென்கிழக்கு அந்தமான் கடற்கரை பகுதியில் 55 முதல் 60 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிருவுறுத்தப்டுகிறது.
வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் 1 முதல் தற்போது வரையில் தமிழகத்தில் 28 செமீ பெய்துள்ளது. வழக்கமாக 32 செமீ அளவு வரையில் பெய்யும். அதன்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 10 சதவீதம் குறைவு.
வளிமண்டல சுழற்சியானது தமிழக பகுதியில் இருந்து கேரளாவை நோக்கி செல்கிறது. அதனால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கேரளாவை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை தொடரும்.
வரும் 26ஆம் தேதியன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றுழுத்த தாழ்வு நிலை உருவாகும், அதிக கனமழை என்பது தற்போது கன்னியாகுமரி, நெல்லை, ஆகிய மாவட்டங்களில் பெய்யும். அக்டோபர்,, நவம்பர் டிசம்பர் என்பது தான் வடகிழக்கு பருவமழை காலம்.
சென்னையை பொறுத்தவரையில், 41செமீ மழை பெய்துள்ளது. வழக்கமாக 58 செமீ பெய்யும். அப்படி பார்த்தல், வழக்கத்தை விட 28 சதவீதம் குறைந்த அளவு மழை பெய்துள்ளது. என தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…