பட்டையை கிளப்ப களத்தில் இறங்கியது பஜாஜ் நிறுவனம்… செட்டாக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சந்தையில் இறக்கியது..

Default Image
  • இந்தியா சந்தையில்  நல்ல மதிப்பை பெற்ற பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்போது இந்தியாவில் செட்டாக் எலெக்ட்ரிக் ரக ஸ்கூட்டரை வெளியிட்டது.
  • இந்த ஸ்கூட்டர் அர்பேன் மற்றும் பிரீமியம் என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இதன், என்ட்ரி லெவல் செட்டாக் ஸ்கூட்டர் விலை ரூ. 1 லட்சம் என்றும் பிரீமியம் வேரியண்ட்ரின்  விலை ரூ. 1.15 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Image result for bajaj chetak
இந்த செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில்,
  • டிஜிட்டல் ப்ளூடூத் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த ஸ்கூட்டரில் ஒற்றை இருக்கை அமைப்பு இருவர் அமரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. அர்பனைட் செட்டாக் ஸ்கூட்டர் எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் இயங்குகிறது.
  • இந்த மோட்டார் IP67 தரச்சான்று பெற்ற லித்தியம் அயன் பேட்டரியில் இருந்து தேவையான மின்சக்தியை எடுத்துக் கொள்கிறது.
    இந்த ஸ்கூட்டர் இகோ, ஸ்போர்ட் என இருவித டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது.
  • செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்புறம் சிங்கில் ஆர்ம் யூனிட், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
  • பிரேக்கிங்கிற்கு டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் செட்டப் வழங்கப்பட்டுள்ளது.
    இந்த, பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. இதன் விநியோகம் வரும் பிப்ரவரி மாதத்தில் துவங்குகிறது. செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 2000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் வருகையை எதிர்நோக்கி அனைத்து தரப்பும் காத்திருக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்