கமலுக்கு வில்லனாகும் பஹத் பாசில்..!! அவரே கூறிய தகவல்..!!

கமல் ஹாசன் நடிக்கவுள்ள விக்ரம் படத்தில் வில்லனாக நடிகர் பஹத் பாசில் நடிக்கவுள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். மேலும் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன் பணியாற்றவுள்ளார். இந்த படத்திற்கான டைட்டில் டீசர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி வெளியானது.
இந்த நிலையில் நேற்று சட்ட மன்ற தேர்தல் முடித்துள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் விக்ரம் திரைப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் காமலிற்கு வில்லனாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் தேதி காரணமாக அவர் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக பஹத் பாசில் நடிக்கவுள்ளார். இந்த தகவலை பஹத் பாசில் நேர்காணல் மூலம் தெரிவித்துள்ளார்.
#VIKRAM pic.twitter.com/kjZ0Z0t78q
— Master Roy ???? (@kwk_vj) April 7, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025